--- --:--:-- --

தமிழ்நாட்டில் 22 ஆம் தேதி வரை மழை..!

2

மிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று முதல் 22 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

அதே சமயம், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்தது. பாளையம்பட்டி, பந்தல்குடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை மண்ணை குளிர்வித்தது.

Right Menu Icon