--- --:--:-- --

ரயில்வே தேர்வு.. வெளி மாநிலங்களில் தேர்வு மையம்..!

1

ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 18 ஆயிரத்து 799 Assistant Loco Pilot பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டது.

 

இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 493 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தொடர்ந்து முதல் கட்ட கணினி வழித் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 முதல் 29 தேதிகள் வரை நடைபெற்றது.

 

அந்த தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறாயிரத்து 315 போட்டியாளர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்ட நிலையில், போட்டித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

 

இதில் தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தேர்வர்களில் 80 சதவீதம் பேருக்கு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon