--- --:--:-- --

உழவர் சந்தையில் விற்கப்படும் விளைபொருட்கள் இனி வீட்டிற்கே சென்று விநியோகம்..!

13

உழவர் சந்தையில் விற்கப்படும் விளைபொருட்கள் இனி வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யப்படும் எனவும் உள்ளூர் இணைய வர்த்தகத் தளத்துடன் 20 உழவர் சந்தைகள் இணைக்கப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 8 கோடி ரூபாய் செலவில், 50 உழவர் சந்தைகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

 

மேலும், உழவர் சந்தையில் விற்கப்படும் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத் தளத்துடன் 20 உழவர் சந்தைகள் இணைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர்களின் குறுகியகாலக் கடன் தேவைகளுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மூலதனக் கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon