உடல் எடையை குறைக்க டயட் இருந்த பெண்ணுக்கு உயிரிழப்பு..!
கேரளாவில் உடல் எடையை குறைக்க youtube பார்த்து டயட் இருந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்ணூரை சேர்ந்த ஸ்ரீ நந்தா என்ற 19 வயதான இளம் பெண் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நோக்கத்துடன் கடந்த ஓராண்டாக போதிய உணவை உண்ணாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
உடல் பருமன் ஆகிவிடும் என்ற அச்சத்தில் உணவை சரியாக எடுத்துக் கொள்ளாததால் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நான்கு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டயட் என்ற பெயரில் உணவை முறையாக எடுத்துக் கொள்ளாததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





