தமிழ்நாட்டை சேர்ந்தவர் தமிழ்நாடு அரசு பணியில் இருக்க வேண்டும் எனில் கண்டிப்பாக தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளருக்கு தமிழ் தெரியாது எனில் என்ன செய்வது?, அவர் எப்படி அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும்? என வழக்கு ஒன்றின் விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.