கடத்தப்பட்ட சிறுமி.. மீட்டு தரக்கோரி பெற்றோர் புகார்..!
சேலம் அருகே 17 வயது சிறுமி கடத்தப்பட்ட நிலையில் அவரை மீட்டு தரகோரி பெற்றோர் புகார் அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கல்யாணி. இவர் தனது 17 வயது மகளை பரத் என்று இளைஞர் கடத்தி சென்றுவிட்டதாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
முதலில் வழக்கு பதிவு செய்ய மறுத்த போலீசார் பின்னர் வழக்கறிஞர் புகார் அளித்து 20 நாட்களாகியும் சிறுமி கண்டறியப்படவில்லை. தனது மகளை மீட்டு தரும்படி காவல் துறையிடம் கோரிக்கை வைத்தனர்.






