செல்போன் வெடித்து சிறுமி உயிரிழப்பு !
கஜகஸ்தானில் செல்போன் வெடித்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 14 வயது சிறுமி நேற்று இரவு வழக்கம் போல தனது செல்போனை சார்ஜ் செய்து உள்ளார். இரவு தூங்கும்போது பாட்டு கேட்கும் பழக்கம் உள்ளதால் சார்ஜ் போட்டு இந்த போனில் பாடல்கள் கேட்டுக் கொண்டு தலையணைகளை வைத்துக் கொண்டு சிறுமி உறங்கியுள்ளார் .
இதனையடுத்து இரவு முழுவதும் சார்ஜ் ஆனதால் செல்போன் சூடாகி வெடித்ததாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியாவில் 97% இன்டர்நெட் பயன்பாடு செல்போன் மூலமாகவே நடைபெறுவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளிலும் இணைய பயன்பாடு அதிகரித்திருப்பது ஒரு ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

500 ஸ்மார்ட் போன் பயனாளர்கள் நடத்தப்பட்ட ஆய்வில் 76 சதவீதம் பேர் செல்போன் மூலம் இணையத்தை பயன்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேர் காலையில் தங்களது ஸ்மார்ட்போன்களை உபயோகித்த பின்னரே மற்ற பணிகளை செய்கிறார்கள். பெரும்பாலும் எழுத்து வடிவிலான தகவல்களை விட வீடியோ வெளியான தகவல்களை அதிகம் விரும்புவதாக 68 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இதுவே யூடியூப் ஓட்டு செயலிகள் மிகப்பெரிய உச்சத்தை தொட காரணமாகவும் அமைந்துள்ளது. இணையப் பயனாளர்களின் 70 சதவீதம் பேர் தங்களது மாநில மொழிகளிலேயே தகவல்களை பெறுவது விரும்புவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





