இந்தோனேஷியாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம்
இந்தோனேசியாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை கட்டுப்படுத்தினர். நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் தலைநகர் ஜகார்த்தாவில் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட முயன்றதால் அவர்களை அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நாடாளுமன்ற சாலையில் டயர்களை தீ வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் தடுப்புகளை மீறி நாடாளுமன்றத்துக்குள் நுழையும் இன்று அதை தடுத்த போலீசார் மீது கற்களை வீசியும் தடியால் தாக்கவும் செய்தனர். இதையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஆனால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.





