விஜய் சேதுபதி உடன் கூட்டணியில் இறங்கப் போகும் கிருத்திகா உதயநிதி..!
வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பின் சிறிது காலம் சினிமா பக்கம் வராமல் இருந்த கிருத்திகா பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடர் மூலம் மீண்டும் ரீஎன்ட்சி கொடுத்தார்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கிருத்திகாவின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
கிருத்திகா சொன்ன கதை பிடித்து போனதால் அதில் நடிக்க விஜய் சேதுபதி ஓகே சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.





