தடையை மீறி பாஜகவினர் போராட்டம்..சேலத்தில் திடீர் பரபரப்பு..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் மற்றும் சம்பவத்தை மறைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆத்தூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் ஆத்தூர் நகர தலைவர் சண்முகசுந்தரம் ஐம்பதுக்கு மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





