--- --:--:-- --

வரும் 4ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு..!

2.1

2025-26 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே 4ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டிருக்கிறது.

 

இந்த நீட் தேர்வு தேசிய தேர்வுகள் முகமை 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்த தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்த 2025 – 26 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வரும் நான்காம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமே தெரிவித்திருக்கிறது.

 

நீட் தேர்வுக்காக வரும் 7-ம் தேதி வரை தேசிய தேர்வு முகமது இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேர்வு வெளியீடு ஆகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது. இந்த இரண்டு மாதத்தில் தேர்வுக்கான பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் பயிற்சியாளர்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon