தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்..!
தமிழ்நாடு அமைச்சரவையில், அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் இந்த அமைச்சரவை இலாகா மாற்றம் நடைபெற்றுள்ளது.
அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தமிழ்நாடு பால்வளத்துறை, காதி, கிராம வாரியத்துறை ஆகிய துறைகள் இருந்தன.
இந்நிலையில், தற்போது அவரிடம் இருந்து காதி, கிராம வாரியத்துறை மாற்றம் செய்யப்பட்டு, வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு அது கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதல்வரின் பரிந்துரையின் பேரில், அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம வாரியத்துறை தற்போது வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




