அமெரிக்காவில் பிரதமரின் முதல் சந்திப்பு..!
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் தேசிய நுண்ணறிவுப் பிரிவு இயக்குநர் துளசி கப்பார்ட்டை சந்தித்து பேசினார். துளசி பதவியேற்றுக் கொண்ட சில மணி நேரங்களில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்னும் சில மணி நேரங்களில் USA அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




