திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறியவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை..!
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வழக்கில் தொடர்புடையவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையம் பகுதியில் வசித்து வந்த பெண்ணிடம் அவரது அத்தை மகன் உறவு முறையான மணிமாறன் (29),என்பவர் கடந்த 2022-ம் வருடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உறவு வைத்துகொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
மேலும் மணிமாறன் ஏமாற்றி வந்த விபரம் அவரது அம்மாவான முத்துசெல்வி (48) என்பவருக்கு தெரிந்தும் மேற்கண்ட பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த 27.07.2022-ம் தேதி மேற்கண்ட பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது, மணிமாறன் மற்றும் முத்துசெல்வி ஆகியோர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு சம்பந்தமாக முன்ஜாமீன் பெற்றனர்.
அந்த வழக்கு நேற்று (10.02.2025) தேதி திருப்பூர் மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு சாட்சிகளை முன்னிலைப்படுத்தி விசாரணை முடித்து, நீதிபதி திரு.ரஞ்சித்குமார் அவர்கள் எதிரி மணிமாறனுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கினை உதவி அரசு வழக்கறிஞர் பானுமதி திறம்பட நடத்தினார்.
மேலும் இவ்வழக்கினை பதிவு செய்து, சாட்சிகளை விரைந்து ஆஜர் செய்த தற்போதைய கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜமுனா, உதவி ஆய்வாளர் அய்யம்மாள் மற்றும் காவல் ஆளினர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.ராஜேந்திரன் பாராட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




