திமுக அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்..!
வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த விசிக கட்சியினர் வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





