--- --:--:-- --

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றியை முதல்வர் ஸ்டாலினுக்கு சமர்பிக்கிறேன் – வி.சி.சந்திரகுமார்

1

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து, கடந்த 5 ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், 67.97 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

 

இதில் தபால் வாக்கு எண்ணிக்கையில் இருந்தே திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வந்தார். 14 ஆவது சுற்றில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 96,450 வாக்குகள் பெற்று, வெற்றியை உறுதி செய்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் பெற போராடி வந்தார்.

 

இறுதியாக 17 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று 90629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதேநேரம், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் இழந்தார். டெபாசிட் பெற 25673 வாக்குகள் தேவையான நிலையில் 23810 வாக்குகள் மட்டுமே பெற்று கட்டுத்தொகையை இழந்தார். அதேபோல் நோட்டா மூன்றாம் இடம் பிடித்தது.

 

திமுக வேட்பாளர் சந்திகுமார் இடைத்தேர்தல் வெற்றிக்கு பின் செய்தியளார்களை சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதியை வெற்றியை முதல்வர் ஸ்டாலினுக்கு சமர்பிக்கிறேன். இந்த வெற்றிக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கும் நன்றி.

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து, 2026ஆம் ஆண்டு முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடர வேண்டும் என்ற நோக்கில் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி.மக்களை நேரடியாகச் சந்தித்து வெற்றி பெற்றதுதான் ஈரோடு கிழக்கு பார்முலா.

 

இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 75% வாக்குகள் பெற்றுள்ளதாகவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் போலவே பொதுத்தேர்தலையும் சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவர் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon