--- --:--:-- --

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 2 சுற்றுகள் முடிவு..!

1

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளாக எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, கடந்த 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி, சுயேட்சைகள் என 46 பேர் போட்டியிட்டனர்.

 

67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 2,27,546 வாக்காளர்களில் 1,54,657 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கி எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 2 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

 

2 சுற்றுகளின் முடிவில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 23,227 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 2,790 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon