பள்ளியில் சடலமாக கிடந்த மாணவி..!
கடலூரில் உள்ள பள்ளி ஒன்றின் விடுதி கழிப்பறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவி பள்ளிக்கு செல்லாத நிலையில் மாலை விடுதியில் தேடிய பொழுது கழிவறையில் அவர் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.
விடுதியில் உணவு சரியில்லை என்றும் கழிவறை சரியில்லை என்றும் மாணவி புகார் தெரிவித்து வந்ததாகவும் அதற்காக பள்ளி நிர்வாகம் அவர் மீது கோபத்தில் இருந்ததாகவும் மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





