காதலை கைவிட மறுத்த மகள்.. முட்டை பொறியலில் எலி பேஸ்ட் வைத்த தாய்..!
instagram காதலனை கைவிட மறுத்த மகளுக்கு எலி பேஸ்டை முட்டை பொரியலில் கலந்து கொடுத்த தாயை காவலர்கள் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகள் குறிஞ்சி என்பவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.
மாணவி குறிஞ்சி இன்ஸ்டாகிராம் மூலம் சாய் குமார் என்பவரை காதலித்து வருவதாக தெரிகிறது. இதனை அறிந்த தாய் மல்லிகா மகள் குறிஞ்சியை கண்டுள்ளார். ஆனால் காதலை கைவிட மறுத்த குறிஞ்சி தாய் மல்லிகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மல்லிகா முட்டை பொறியலில் எலி பேஸ்ட்டை கலந்து குறிஞ்சிக்கு கொடுத்ததாக தெரிகிறது. அந்த பொறியலை சாப்பிட குறிஞ்சி வாயில் நுரை தள்ளியபடி கடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தம்பி முனுசாமி இருவரும் குறிஞ்சியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





