சிறுமிகள் கருக்கலைப்பு: ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!
16 வயது சிறுமியின் 24 வாரக் கருவை கலைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் அவரது தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை இன்று விசாரித்த நீதிபதிகள், மைனராக இருந்தாலும் தனது கருவை கலைப்பது பற்றி சிறுமியே முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டனர்.
18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கருவுற்றால், அதனை கலைக்க பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி அவசியம் என சட்டம் இருக்கும் நிலையில், ஐகோர்ட் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




