திருப்பூரில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு வேலன் நகர் 3வது வீதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவருடைய மகன் ஸ்டீபன் வீட்டில் அருகே உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த ஸ்டீபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




