--- --:--:-- --

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமலாகிறது பொது சிவில் சட்டம்..!

2

னவரி 27 அன்று, சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாற உள்ளது. இது அரசியல் விவாதங்களையும் தேசிய கவனத்தையும் தூண்டியுள்ளது. அதே நாளில் மதியம் 12:30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொது சிவில் சட்டத்திற்கான இணையதளத்தையும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.

 

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிவடைந்துள்ளது. இந்த சட்டத்திற்கான விதிமுறைகள், அதிகாரிகளுக்கான பயிற்சிகள் என அனைத்தும் நிறைவடைந்துள்ளது.

 

பொது சிவில் சட்டம் சமுதாயத்தில் அனைவருக்குமான உரிமைகளையும், பொறுப்புகளையும் சரிசமமாக வழங்கும். நாட்டை வளர்ச்சியடைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட, இணக்கமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாற்ற பிரதமர் செய்து வரும் மாபெரும் யாகத்தில் நமது மாநிலம் அளித்த பிரசாதம்தான் பொது சிவில் சட்டம்” என்று தெரிவித்துள்ளார்.

 

அமல்படுத்தப்படும் பொது சிவில் சட்டம் மாநிலம் முழுவதிற்கும் பொருந்தும் என்றும், மாநிலத்தை விட்டு வெளிப்பகுதிகளில் வசிக்கும் உத்தரகாண்ட் மாநில குடிமக்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேசமயம், இந்தச் சட்டம், பட்டியல் பழங்குடியினர், பாதுகாக்கப்பட்ட அதிகாரம் பெற்ற நபர்கள் மற்றும் சமூகங்களைத் தவிர, உத்தரகாண்டில் வசிப்பவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

Right Menu Icon