--- --:--:-- --

கல்வி நிறுவனங்களுக்கு அருகிலேயே போதைப் பொருட்கள் விற்பனை – ஆளுநர்

1

மிழ்நாட்டின் வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்வதாக குடியரசு தின உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.குடியரசு தினத்தையொட்டி உரையாற்றிய அவர், அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனில் தமிழ்நாடு அடிமட்டத்தில் இருப்பதாகவும், உயர்கல்வியிலும் சிறப்பான நிலை இல்லை எனவும், உயர்கல்வி பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

 

மேலும், பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகவும், ஊதியம் அளிக்க முடியாத நிலை இருப்பதால், பல பல்கலைக்கழகங்களில் 50 சதவீத அளவுக்கே ஆசிரியர்கள் இருப்பதாகவும் கூறினார்.ஏற்க முடியாத காரணங்களைக் கூறி துணைவேந்தர் நியமனங்களைத் தடுப்பதாகவும், கல்வி நிறுவனங்களுக்கு அருகிலேயே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் ஆளுநர் கவலை தெரிவித்தார்.

Right Menu Icon