சோசியல் மீடியாவை தவிர்க்கவே முடியாது..சன்னி லியோன் பேட்டி..!
எதிர்மறையான விஷயங்களை தவிர்க்க கற்றுக் கொண்டதாக நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார். வாழ்வின் போக்கில் பயணம் செய்தவர்களுக்கு இடையே அந்த பயணத்தையே மாற்ற புது வாழ்வை அமைத்துக் கொண்டவர் சன்னிலியோன்.
பாலிவுட் பிரபலமாக இருக்கும் இவர் அண்மையில் கொடுத்த பேட்டி பேசு பொருளாகி இருக்கிறது. பிரபலமாக இருப்பவர்கள் சமூக வலைதளங்களை புறக்கணிக்க முடியாது என அவர் கூறியுள்ளார். தனிப்பட்ட வாழ்வில் பல நிராகரிப்புகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டதாக கூறியுள்ள சன்னி லியோன் எதிர்மறையான விஷயங்களை புறந்தள்ளிவிட்டு கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
ஒரு துறையில் நீங்கள் நிலைத்திருக்க வேண்டும் என்றால் கடின உழைப்பு ஒன்றை அதற்கான தீர்வு என சன்னி லியோன் கூறினார். டிஜிட்டல் மயமாக்கிவிட்ட காலத்தில் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தி தனி திறமைகளை அதில் வெளிபடுத்த வேண்டும் என யோசனை தெரிவித்திருக்கிறார்.
உங்கள் திறமை ஒரு இயக்குனரிடம் தயாரிப்பாளரிடமோ சென்றடைய சமூக வலைதளம் உதவியாக இருக்கும் எனவும் சன்னி லியோன் கூறியுள்ளார்.






