பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் ..!
பொங்கல் பண்டிகையின்போது 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களில் குடும்பங்கள் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதால், அந்தத்தொகையை விடுவிக்க மத்திய ஊரக அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறும் பிரதமரை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நூறுநாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய 1056 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 91 லட்சம் தொழிலாளர்கள் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றுவதாகவும் அவர்களில் 86 சதவீதம் பேர் பெண்கள் என்றும் கிட்டத்திட்ட 29 சதவீத்தினர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.





