ஜெயகோபாலுக்கு அக்டோபர் 11ஆம் தேதி வரை சிறை!
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் ஜெயகோபால் அக்டோபர் 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை காவல்துறையினரும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவினரும் தனித்தனியே வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பதுங்கியிருந்த ஜெயகோபால் பள்ளிக்கரணை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட அவர் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் ஒப்படைக்கப்பட்டார். பரங்கிமலையில் வைத்து செய்ய கோபாலிடம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவர் பேனர் வைத்தது தவறு தான் என நீதிபதியிடம் தவறை ஒப்புக்கொண்டார். கோபாலை அக்டோபர் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் பலனை சுப்பிரமணி சங்கர் மற்றும் லக்ஷ்மிகாந்த் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 4 பேரும் கொடி கட்டும் பணி செய்து வந்தவர்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




