விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்..!
நெல்லை மாவட்டம் அருகே ரயில் சுரங்க பாலத்தில் அரசு பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே சுரங்க பாலத்தில் நாகர்கோவில் நோக்கி சென்று அரசு பேருந்தும் 108 ஆம்புலன்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.
சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ஆம்புலன்சில் அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.





