பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு..!
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேசன் கடைகளிலும் இதனை பெறலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.





