தொடக்கக்கல்வி ஆசிரியர் தேர்வு: 30ஆம் தேதி சான்றிதழ்
ஜூன், ஜூலையில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை ஏராளமான மாணவர்கள், தனித்தேர்வர்கள் எழுதியிருந்தனர். அவர்களுக்கு 30ஆம் தேதி முதல் மதிப்பெண், பட்டய சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
ஆதலால் பயிற்சி மாணவர்கள் தங்கள் பயின்ற நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி, பயிற்சி நிறுவனத்திலும் சான்றிதழ்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






