ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை..!
ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தையை மீட்கும் பணிகள் முழு வீச்சு நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 150 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு பாசனத்திற்காக தோண்டப்பட்டது.
மூடப்படாமல் இருந்த இந்த ஆழ்துளை கிணற்றில் மூன்று வயது பெண் குழந்தை தவறி விழுந்துள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





