--- --:--:-- --

தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு..!

6

தொழில் நுட்ப கோளாறால் விம்கோ நகர் விமான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விம்கோ நகர் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் இடையே நேற்று இரவு 10 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

 

இதனால் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து ரயில்கள் இயக்கப்பட்டது.

 

இதனால் வழக்கமாக 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டதால் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon