திமுக கவனத்துடன் இருக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக கவனத்துடன் இருக்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் அல் உம்மா தலைவர் பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது யார் என கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தை ஆளுங்கட்சி கையாண்ட விதம் சரியில்லை என்றார். பயங்கரவாதிகளை தியாகிகளாக சித்தரிப்பது, குண்டுவைத்ததைக் காட்டிலும் படுபாதகம் எனவும் கண்டித்துள்ளார்.





