--- --:--:-- --

விஏவை பூட்டி வைத்து விட்டு ஆவணங்களுடன் சென்ற உதவியாளர்..!

8

ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து உதவியாளர் பூட்டி விட்டு சென்றதால் புகார் எழுந்துள்ளது. சின்னசேலம் அருகே உள்ள வடகந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசியின் மகள் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

 

இங்கு உதவியாளராக பணிபுரியும் சங்கீதா என்பவர் தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு பதிவேடுகளை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

 

தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon