குகேஷுக்கு தடல்புடல் வரவேற்பு
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ் சென்னை வந்தடைந்தார். குகேஷூக்கு தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தந்த குகேஷிற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.5 கோடி பரிசு அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




