கூண்டோடு திமுகவிற்கு சென்ற நாம் தமிழர் கட்சியினர்..!
கோவை, நாமக்கல் மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையிலும் நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு திமுகவில் இணைத்தனர். நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப நாட்களாக நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.
அந்த வகையில் கோவை, நாமக்கல் மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையிலும் நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் விலகிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைத்து கொண்டனர்.





