ரயில்கள் ரத்து..தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!
மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருச்சியில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி திண்டுக்கல் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அதன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை எக்ஸ்பிரஸ் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி – மதுரை இடையில் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டது. திருச்சியில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக மதுரையிலிருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வர வேண்டிய ரயில் திருச்சியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் என கூறப்பட்டுள்ளது.





