பெஞ்சல் புயல் நிவாரணம்..ரேஷன் அட்டைக்கு ரூ.5,000 அறிவிப்பு..!
புதுச்சேரியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தினங்களில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசாணை வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் பெஞ்சல் புயலால் பாதித்த அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிவாரண நிதிக்கான கோப்பு நிதி துறை மூலம் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாமை சேர்ந்த அரசு ஊழியர்கள் உட்பட 3 லட்சத்து 54,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்ததை தொடர்ந்து புதுச்சேரி அரசு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





