சுகாதாரத் துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு..திருச்சி சிவா பேச்சு..!
சுகாதாரத் துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். சுகாதார துறையின் பெண்களுக்கான அடிப்படை பாதுகாப்பை வலியுறுத்திய திருச்சி சிவா இதனை உறுதிபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்தல் அனுபவம் உள்ள பாதுகாப்பு பணியாளர்களை வேலையில் அமர்த்துதல் போதிய அளவு வெளிச்சம் இருக்குமாறு உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற நடைமுறைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





