உணவகம், விடுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை..!

சாம் மாநிலத்தில் உணவகம், விடுதி உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக தற்போது உள்ள சட்டத்தின் திருத்தம் செய்து புதிய விதிகளை இணைக்க அமைச்சர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து செய்திகள் அந்த மாநில முதலமைச்சர் எந்த உணவகத்திலும் ஹோட்டலிலும் மாட்டிறைச்சி வழங்கப்பட மாட்டாது என்றும் பொது இடங்களிலும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மாட்டு இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்பது தங்கள் முடிவாக இருந்ததாக ஹிமந்த சர்மா குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த கட்டுப்பாடு உணவகம் விடுதி மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பொருந்தும் என்றும் விதிகளை மீறுவோர் சட்டத்தை படித்த சட்டத்தில் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார். வழிபாட்டு தளங்களை சுற்றி ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏற்கனவே மாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.