--- --:--:-- --

14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவு..பிரதமருக்கு பறந்த கடிதம்..!

5

பெஞ்சல் புயல் பாதிப்புகளின் வீரியத்தை கணக்கில் கொண்டு 2000 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் தமிழகத்தில் வரலாறு காணாத பேரழிவைப் பெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். பெஞ்சல் புயலால் 14 மாவட்டங்களில் ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2.1 லட்சம் வேளாண் நிலங்கள் நிலத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

அழிவின் தீவிரம் மற்றும் மறு சீரமைப்புக்கான அவசர தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரண தொகையாக தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

சேதங்கள் பற்றிய விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு மத்திய குழுவை விரைவில் நியமிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Right Menu Icon