6 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த அவகாசம்..!
புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மின் அலுவலகங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த வருகிற பத்தாம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த வருகிற 10ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.





