--- --:--:-- --

காங்கிரசார் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு..வெடித்த கலவரம்..!

4

ம்பல் நகரில் வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் ஜம்மா மசூதியை நீதிமன்ற உத்தரவன்படி ஆய்வு செய்ய சென்ற தொல்லியல் துறையினருக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இதனையடுத்து காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வடித்தது. இதை கட்டுப்படுத்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். சம்பல் பகுதியை பார்வையிட காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு, கட்சியின் தலைவர் அஜய் ராய் தலைமையில் ஒன்று கூடினர்.

 

சம்பல் பகுதியை நோக்கி காங்கிரஸ் சார்பில் புறப்பட தயாரான போது காவலர்கள் தடுப்பு வேலிகளை அமைத்து அவர்களை கட்டுப்படுத்தினார். அதையடுத்து காங்கிரசாருக்கும், காவலர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

சம்பல் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் வெளி ஆட்கள் ஊருக்குள் நுழைய வரும் 10ம் தேதி வரை தடை அமலில் உள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

 

Right Menu Icon