திருவாடானையில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் அதன் மாநில செயலாளர் சுதாகர் தலைமையில் வட்ட தலைவர் பொறுப்பு அன்பரசன் செயலாளர் ஸ்ரீதர் பொருளாளர் தென்னவன் முன்னணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் உடனடியாக வழங்கிட வேண்டும், நான்காம் நிலைக்கு இணையான டி பிரிவு ஊதியம் வழங்கிட வேண்டும், கிராம நிர்வாக அலுவலராக 20 சதவீதம் பதவி உயர்வு இருப்பதை 50 சதவீத பதவி உயர்வாக உயர்த்திட வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கருணை அடிப்படையில் பணியினை காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை கண்டன கோசங்களாக எழுப்பினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாடானை தாலுகாவைச் சேர்ந்த ஏராளமான கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டார்கள்






