--- --:--:-- --

துக்க வீட்டில் நடந்த துக்க சம்பவம்..!

3

கோவையில் துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. கணபதி பகுதியில் இயற்கை மரணம் அடைந்த ராமலட்சுமியின் உடல் ஜெனரேட்டர் உதவியுடன் ஃப்ரீசர் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது.

 

ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றப்பட்ட பொழுது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

அதில் ராமலட்சுமியின் மருமகள் பத்மாவதி ஏற்கனவே உயிரிழந்த நிலையில் பானுமதி மற்றும் ராஜேஸ்வரன் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon