--- --:--:-- --

சொந்த ஊரில் வந்து இறங்கும் பொழுது மரணம்..!

4

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் இறந்த பெண் ஒருவர் மலேசியாவில் இருந்து வரும் பொழுது விமான நிலைய உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்துகிறது. அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கோலாலம்பூரில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

 

2 வருடம் கழித்து சொந்த ஊர் வருவதற்காக விமானத்தில் சென்னை வந்தார். அப்பொழுது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் விமானம் தரையிறங்கியதும் ராசாத்தி பரிசோதித்து உள்ளனர்.

 

ஆனால் விமான இருக்கையிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விசாரணையில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு தொடர்பான நோய் இருந்தது தெரிந்ததால் சொந்த ஊரில் தனது மகளுடன் இருக்கலாம் என்று தெரிய வந்தது.

 

ஆனால் சென்னையில் இறங்கும் முன்பே உயிரிழந்தது அவரது சொந்த ஊரான அரசம்பட்டு கிராமத்தை சோகத்தில் ஆழ்த்திள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon