குழந்தை கடத்தல்..அதிர்ச்சி வாக்குமூலம்..!
அரசு நிதி உதவி வாங்கி தருவதாக கூறி தாயை ஏமாற்றி குழந்தையை கடத்தியதாக சென்னை கண்ணகி நகர் குழந்தை கடத்தல் வழக்கில் கைதான தீபா காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இது கண்ணகி நகரை சேர்ந்த ஆரோக்கியதாஸ் நிஷாந்தி தம்பதியின் ஆண் குழந்தையை கடத்திய தீபா என்பவரை வேலூரில் காவல்துறையினர் கைது செய்து குழந்தையை மீட்டனர். இது குறித்து தீபா காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் தனது குழந்தை இல்லாததால் பெண் ஒருவர் தங்கள் பகுதியில் ஏழை பெண்கள் இருப்பதால் அவர்களிடம் இருந்து குழந்தையை வாங்கி தருவதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
அவருக்கு பல ஆண்டுகளுக்கு பின் குழந்தையை பிறந்தது என்பதால் குழந்தை கிடைக்காது என தெரியவந்தது. இதை எடுத்து குழந்தையை அபகரிக்க திட்டமிட்டு நிஷாந்தியை ஏமாற்றி அழைத்துச் சென்று குழந்தையை கடத்தியதாக தீபா வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





