அடிக்கடி பிரச்சினை..ஓலா ஷோரூமை முற்றுகையிட்ட மக்கள்..!
ஓலா பைக்குகள் அடிக்கடி பழுது ஏற்படுவதற்கான குற்றம் சாட்டி பொள்ளாச்சியில் உள்ள ஓலா ஷோரூம் முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சின்னம்பாளையம் பகுதியில் ஓலா ஷோரூம் அமைந்துள்ளது.
இந்த விற்பனை நிலையத்தில் இருந்து அந்த பகுதியை சேர்ந்த பலரும் பேட்டரி வாகனங்களை வாங்கியுள்ளனர். இந்த நிலையில் ola பைக்கில் அடிக்கடி பழுது ஏற்படுவதாக குற்றம் சாட்டி ஓலா ஷோரூம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனங்களை கொண்டு வந்து பழுது பார்த்தாலும் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன என குற்றம் சாட்டினார். வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் வழங்குவதில்லை என்றும் பலமுறை அலைக்கழிக்கப்படுகிறோம் எனவும் கோஷங்கள் எழுப்பின. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





