--- --:--:-- --

காரை பார்க்கிங் செய்யும் பொழுது நபர் கோர மரணம்..!

8

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. 70 வயதான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு தனது காரை செட்டில் நிறுத்த சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கார் பிரேக் பிடிக்காமல் அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.

 

இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.

 

விபத்துக்குள்ளான கார் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. உயிரிழந்த சுப்பிரமணி முன்னாள் ஊராட்சி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon