விஜய் கட்சி நிர்வாகிக்கு கோணி ஊசியால் வயிற்றில் குத்து..!
நாகையில் பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் பொழுது தட்டி கேட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கோணி ஊசியால் குத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகையை சேர்ந்தவர் ராஜா. தமிழக வெற்றிக்கழக மாவட்ட இளைஞரணி துணை செயலாளரான இவரது அண்ணன் மகன் லோகேஷ் என்பவருக்கும் செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஜெயக்குமாரின் உறவினர் மகனுக்கும் இடையே பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை பார்ப்பதற்காக நள்ளிரவு இரு தரப்பினரும் அங்கு வந்திருந்தனர். அப்பொழுது பட்டாசு வெடித்த சிறுவர்களை அடித்ததில் நியாயமா என தட்டிக் கேட்டு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ராஜா சத்தம் போட்டு உள்ளார்.
அப்பொழுது அங்கிருந்த ஜெயக்குமார் ஆத்திரமடைந்து தான் கையில் மறைத்து வைத்திருந்த கோனி ஊசியால் ராஜாவின் வயிற்றில் இரண்டு இடத்தில் குத்தி கிழித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவத்தில் ராஜா வயிற்றிலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறி அங்கேயே மயங்கி விழுந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜாவை கோணி ஊசியால் குத்தி விட்டு தம்பி ஓடி தலைமறைவான ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





