--- --:--:-- --

ஈரோடு : சத்தியமங்கலத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய எம்.எல்.ஏ

11

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் நல்லூர் கிராமம் முல்லை நகரில் குடியிருந்து வரும் மாற்றுத்திறனாளி எல்.முகமது ரஃபி  என்பவரின் இரண்டு கால்களின் பாதங்களும் சுகரின் காரணமாக அகற்றப்பட்ட நிலையில் எந்த வேலைக்கும் போக முடியாமல் குடும்பம் நடத்த வருமானம் ஏதும் இல்லாமல் சிரமமப்பட்டு கொண்டிருந்துள்ளார்.

 

குடியிருக்க சொந்த வீடும் இல்லாமல் ரொம்ப சிரமப்பட்டு கொண்டு வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் உள்ளதை அறிந்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரும் மாநில மாற்றுத்திறனாளிகள் வாரிய உறுப்பினருமான அந்தியூர் ஏஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ தீபாவளி அன்று மதியம் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடிடும் வகையில் நிதி உதவியினை   வழங்கி மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அவருக்கு அரசின் மூலம் (மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் விதியின்படி நலத்திட்ட உதவிகள் கிடைத்திடவும் மற்றும் குடியிருக்க அருகில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு மற்றும் வருமானத்திற்காக கூட்டுறவு வங்கியின் மூலம் கடனுதவி பெற்று அவரின் விருப்பப்படி மளிகை கடை அல்லது ஆவின் பால் பூத்து ஏற்படுத்திக் கொடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon